இஸ்ரவேலின் பேர் இனி...
கடந்த வருடம் ஏப்ரலில் பாலஸ்தீன பிரதமர் சலாம் பாயத் “கடவுளுக்கு சித்தமானால் அடுத்த வருடம் நாமெல்லாரும் பாலஸ்தீனத்தின் தலைநகரமாம் கிழக்கு ஜெருசலத்தில் தொழுகைக்காக ஒன்று கூடுவோம்” என அறைகூவல் விடுத்திருந்தார்.அவரது இந்த முழக்கம் உண்மையாவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிய தொடங்கிவிட்டன.இஸ்ரேல் நாடானது இரண்டாக பிரிக்கப்பட்டு பாலஸ்தீனம் உருவாகி, அதன் தலைநகரமாம் எருசலேமும் இரண்டாக்க பிரிக்கப்பட்டு கிழக்கு எருசலேமை பாலஸ்தீனாவுக்கு கொடுக்க உலகம் முழுவதிலிருமிருந்து இஸ்ரேலுக்கு அதிக பிரஷர். இது பற்றிய வாக்கெடுப்பு ஐநா சபையில் வரும் நாட்களில் நடக்கவிருக்கிறது.வேதாகமம் இது பற்றி என்ன கூறுகிறது.
லூக்கா 24:21 புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
வெளி 11:2 ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
யோவேல் 3:2 என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,..அங்கே அவர்களோடு வழக்காடுவேன்.
எகிப்துக்கான ஈரானிய தூதர் மொஜ்டபா அமானி ஒரு அரேபிய பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஐநாவில் அங்கத்தினராகும் பாலஸ்தீனம் இஸ்ரேலின் அழிவுக்கான ஒரு படிக்கட்டு என வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
இப்படி சங்கீதம் 83:4 வசனமும் நிறைவேறுகிறது. “அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.”
இஸ்ரேலுக்காக ஜெபிப்பீர்களா?
ரோமர் 10:1 சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.
PA Prime Minister Salam Fayyad: Next year J'lem will be our capital
"Next year, Inshallah (God willing), we shall celebrate in the Church of the Holy Sepulchre in east Jerusalem, the capital of the Palestinian state,"
Iranian Ambassador: U.N. Vote On Palestinian Statehood Is a ‘Step Towards Wiping Out Israel’
Mojtaba Amani, Iran’s ambassador to Egypt, openly conceded in an interview with Al-Watan al-Arabi, that the PA’s push for full membership as a UN member state “is a step towards wiping out Israel,“
No comments:
Post a Comment