Friday, 2 December 2011

வேதாகம துணுக்கு - 1

தாவீது 3 முறை ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டார்
a. தன் வீட்டார் மத்தியில் 1 சாமு 16:12,13
b. தன் கோத்திரத்தார் (யூதா) மத்தியில் – 2 சாமு 2:4.
c. தன் தேசத்தாரின் மத்தியில் – 2 சாமு 5:3.


கிதியோன் மீதியானியரை ஜெபிக்க சதாரணமான பொருள்களை பயன்படுத்தினார் – நியா 7:16-22.
a. எக்காளம்
b. வெறும் பானை
c. தீவட்டி


3 விதமான கிறிஸ்துக்கள்
a. இயேசு கிறிஸ்துக்கள் – எபி 13:8
b. அநிதிக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.


பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறது –
லேவி 17:7;
உபா 32:17;
2 நாள 11:15.

தாவீதின் பராக்கிரமசாலியான “பெனாயா” என்பவர் 3 சிங்கங்களை கொன்றவன் – 2 சாமு 23:20,22

மனுஷனுக்குள் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற 3 தத்துவங்கள் அடங்கியிருக்கிறது – 1 தெச 5:23.

இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும் – நியா 4:4.

தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த Samuel.F.B Morse முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா?
What hath God wrought ? – Num 23:23.
தேவன் என்னென்ன செய்தார்? – எண் 23:23.

யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.

நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.

வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.
a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.


புதிய ஏற்பாட்டில் “அல்லேலூயா” என்ற வார்த்தை நான்கு முறை வருகிறது – வெளி 19:1,3,4,6.


‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது
1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.
2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.
3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.
4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.

ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்
1. எலியா – 1 இராஜ 18:37,38.
2. தாவீது – 1 நாளா 21:25,26.
3. சாலொமோன் – 2 நாளா 7:1.

No comments:

Post a Comment