Friday, 30 September 2011

டேவிட் பிரெய்னார்ட் 1718-1747


டேவிட் பிரெய்னார்ட் 1718-1747
பெலவீனமான சரீரத்தைக் கொண்ட ஒருவர் மிஷனெரிப் பணியில் ஈடுபட முடியுமா? என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளிக்கிறது டேவிட் பிரெய்னார்ட் என்ற மிஷனெரியின் வாழ்க்கை வரலாறு.
1718-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி கனக்டிகட்() என்ற இடத்திலுள்ள ஹாடம்() என்ற ஊரில் டேவிட் பிரெய்னார்ட் பிறந்தார். டேவிட் பிரெய்னார்டின் பெற்றோருக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைகள். ஆனால் டேவிட் பிரெய்னார்ட்க்கு 9 வயதிருக்கும்போது தகப்பனாரும் 14 வயதில் தாயாரும் இறந்து போயினர். எனவே சிறுவயது முதல் ஒரு சோக மனப்பான்மையை கொண்டவராயும் மரணபயம் பீடிக்கப்பட்டவராயும் இருந்தார். அதனால் சிறுவயதில் சந்தோஷத்தையும், விளையாடும் ஆர்வத்தையும் இழந்தார். தீய பழக்கவழக்கங்கள் சந்தோஷத்தைத் தரும் என்று பிரியத்துடன் அதில் ஈடுபட்டு, தனது மன சாட்சியைக் கறைப்படுத்தி, குற்ற உணர்வுகளல் பாதிக்கப்பட்டார். இருபது வயதான டேவிட் தனது சகோதரியுடன் இணைந்து டுரம் என்ற இடத்திலுள்ள பண்ணையில் வேலைபார்த்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
அப்போது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை தேவனுடைய கோபாக்கினையைப் பற்றிய எண்ணம் அவருடைய உள்ளத்தில் ஏற்பட்டது. ஒரு நாளை முழு உபவாச நாளாக ஒதுக்கீடு செய்து ஜெபம் செய்தார். தேவன் அவரது இருதயக் கண்களைத் திறந்து, அவருடைய பாவங்களை உணர்த்தினார். பிரெய்னார்ட் தன் பாவங்களைத் தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றபோது சமாதானம் அவரைச் சூழ்ந்துகொண்டது. அதைத் தொடர்ந்து 1739ல் தனது 21வது வயதில் ஏல் கல்லூரியில் () சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். அங்கு அவர் வியாதிப் பட்டமையால் வீடுதிரும்ப நேரிட்டது. 1742-ம் ஆண்டு எபிநேசர் பெம்பர்டோன் என்பவர் செவ்விந்தியர்கள் மத்தியில் மிஷனெரிப் பணி செய்யப்பட வேண்டிய அவசியத்தை சவாலாகப் பிரசங்கித்தபோது, ஆண்டவர் தன்னை மிஷனெரியாகச் செவ்விந்தியர் மத்தியில் பணிபுரிய அழைப்பதை டேவிட் உணர்ந்தார். ‘தேவனே, இதோ அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும், கரடு முரடான, காட்டு மிராண்டிகளிடமும் போக ஆயத்தமாயிருக்கின்றேன். உலகத்தில் சகல வசதிகளையும் விட்டுப் போகவும், ஏன்? மரணத்தினூடேயும் செல்ல ஆயத்தம். உம்முடைய இராஜ்யத்தைக் கட்டுவதற்காக எங்கு வேண்டுமானாலும் போக ஆயத்தமாயிருக்கிறேன்என்று தன்னை அர்ப்பணித்து ஜெபித்தார்.
மிஷனெரிப் பணிக்கென தனது அழைப்பை உறுதிப்படுத்திக்கொண்ட டேவிட் ஸ்கார்ட்லாந்து மிஷனெரி ஸ்தாபனம், செவ்விந்தியர் மத்தியில் மிஷனெரிகளை அனுப்புவதை அறிந்து அதில் இணைந்தார். முதலாவது நியூயார்கில் கௌநாமீக் என்ற இடத்தில் தங்கியிருந்து மொழிகளைக் கற்றார். இவருக்கு மொழிகளைச் சொல்லிக்கொடுத்த ஜாண் சர்ஜண்ட்() செவ்விந்தியர்கள் மத்தியில் எட்டு வருடம் பணிபுரிந்தவர். அனுபவமிக்க அந்த மிஷனெரி மூலம் ஊழியத்திற்கான பல காரியங்களைக் கற்றார்.
இந்தியர்கள் வசிக்கும் கௌநாமீக் என்ற அந்த இடத்திலேயே ஊழியத்தையும் ஆரம்பித்தார். அதிகாலையில் எழுந்து ஜெபத்திலும், தியானத்திலும் அதிக நேரம் செலவழித்த பிறகு அங்குள்ள இந்தியருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பார். ஊழியப்பாதையில் இவரது வாழ்வு அதிக கடினம் நிறைந்ததாக இருந்தது. எளிமையாக வாழ்ந்த அவர் தரையில் சில மரப்பலகைகளை அடுக்கி அதின்மேல் சிறிது வைக்கோலைப்பரப்பி தனது படுக்கையாக்கிக் கொண்டார். கரடு முரடான பாதைகளில் தளராமல் நடந்து சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். முதல் குளிர்காலத்தை அவர் சந்தித்தபோது குளிரினால் அதிக சுகவீனப்பட்டார். ஒரு முறை காடுகளில் வழிமாறிச் சென்று தொலைந்துபோய், பலமணி நேரங்களுக்குப் பின் வீடு சேர்ந்தார். மற்றொருமுரை ஆற்றில் மூழ்கி உயிர் தப்பிப்பிழைத்தார். நல்ல ரொட்டி வாங்க 15 மைல்கள் நடக்கவேண்டும் என்பதால் செவ்விந்தியரின் உணவையே சாப்பிடக் கற்றுக்கொண்டார்.
இவர் எங்கெல்லாம் சுவிசேஷத்தை பிரசங்கித்தாரோ அங்கெல்லாம் மக்கள் கண்ணீர்விட்டு அழுது மனந்திரும்பினர். சங்குவேன் என்ற இடத்தில் இவர் பிரசங்கித்தபோது பிரசங்கத்தைக்கேட்ட பலதரப்பட்ட மக்கள் இருதயத்தில் குத்துண்டு மன்ந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். சங்குவேரில் தங்கியிருந்தபோது சுகவீனப்பட்டதால் அவர் ஆறு மாதங்கள் கழித்து டேலாலேர் வந்து சேர்ந்தார். அப்போது பட்டணங்களிலுள்ள பெரிய சபைகளுக்குப் போதகராக வந்து பொறுப்பெடுக்க அவரை அவரது நண்பர்கள் பலர் அழைத்தன்ர். ஆனால் டேவிட் அதற்கு மறுத்து இந்தியருக்காகவே வாழ்வேன் என உறுதிபடக் கூறிவிட்டார்.
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்(சங் 126: 5) என்ற வசனத்துக்கேற்ப டேவிட் செய்த ஊழியம் பலன்கொடுக்க ஆரம்பித்தது. 1745 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருநாள் காலை அவர் இந்தியருக்குப் பிரசங்கித்தபோது, கேட்டவர்கள் ஆத்தும வியாகுலத்தால் நிரம்பி அழ ஆரம்பித்தனர். சிறுவர்கள்கூட இவரது செய்தியால் தொடப்பட்டனர். சில வெள்ளையர்கள் இப்பைத்தியக்காரன் இந்தியர்கள் மத்தியில் என்ன செய்கிறான் பார்ப்போம் என்று வந்தபோது இவரது செய்தி அவர்களையும் தொட்டது.
ஒரே வாரத்தில் 25 பேர் தேவபிள்ளைகளாய் தைரியமாய்ச் சாட்சி பகர்ந்தனர். அங்கு ஒரு கிறிஸ்தவப் பள்ளியையும் நிறுவினார்.
1745-ம் ஆண்டு கிராஸ்வீக்சங் () என்ற இடத்திலும் தேவன் எழுப்புதலைக் கட்டளையிட்டார். 1746-ம் ஆண்டு, நியூ ஜெர்சி() என்ற இடத்திலுள்ள இந்தியர்கள் கிரேன்பரி() என்ற இடத்தில் குடியேறினபோது, அவர்கள் மத்தியில் ஒரு திருச்சபையை நிறுவினார். இப்படி இவரது பணிமூலம் ஒன்றரை வருடத்துக்குள் 150 மக்கள் விசுவாசத்துக்குள் வந்தனர்.
இவரது ஊழியத்தின் பலனைப்போலவே பாடுகளும் பெருகின. இவர் ஆங்கிலேயருக்கு விரோதமாகச் செயல்பட்டு, இந்தியர் மத்தியில் கலகத்தை ஏற்படுத்துகிறார் என்று கூறி அவரைத் தண்டிக்க அரசாங்க அதிகாரிகள் பிரயாசப்பட்டனர். உலகம் என்னை துன்மார்க்கன் எனக்கருதி என்னை உபத்திரவப்படுத்தினாலும், தேசத்துரோகி என்று என்னைச் சிரச்சேதம் பண்ணினாலும் ஆபத்துக்காலத்தில் தேவன் என் உயர்ந்த அடைக்கலம், அவரது வார்த்தைகளை நான் தைரியமாய் மக்களுக்குச் சொல்வேன் என்றார்.
1746-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடுமையான இருமலும் காய்ச்சலும் உண்டாயின. உடலில் அதிகமான வலி ஏற்பட்டது. ஆனாலும் நடந்து சென்று இந்தியருக்குப் பிரசங்கிப்பதை அவர் நிறுத்தவில்லை. தனது சுகவீனத்தைக் குறித்து அவர் எழுதும்போது, நான் பிழைத்திருக்க வேண்டுமோ அல்லது பிழைத்திருக்க வேண்டாமோ என்பது என் ஆண்டவரின் பிரச்சனை. அதைக்குறித்து நான் கவலைப்படுவது அவசியமற்றது என்று தனது டைரியில் எழுதினார். மற்றொருமுறை நடக்கவோ, எழுதவோ, வாசிக்கவோ முடியாத நிலையில் இருந்தாலும், என்னுடைய ஆவியோ புது உற்சாகமடைந்திருப்பதை உணருகிறேன் என்றார். அவருக்குக் காச நோய் முற்றிவிட்டது என்றும் பிழைப்பது மகா கடினம் என்றும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர். ஆனால் டேவிட் அதைக் குறித்துக் கவலைப்படாமல் எப்போதும் சந்தோஷ்த்துடனும், உற்சாகத்துடனும் காணப்பட்டார்.
அவர் சுகவீனமடைந்ததால் அவருக்குத் திருமணத்திற்கென நிச்சயம் செய்யப்பட்டிருந்த ஜெருஷா அம்மையாரும் இன்னும் சில நண்பர்களும் அவருக்குப் பணிவிடை செய்தார்கள். அவருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மரணம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர் தனக்கு நியமிக்கப்பட்ட ஜெருஷா-வை நோக்கி ஜெருஷா நீ என்னை விட்டுப் பிரிந்து இருக்க ஆயத்தமாயிருக்கிறாயா? நான் உன்னை விட்டுப் பிரிந்து செல்ல ஆயத்தம். நான் இனி உன்னைக் காணாவிட்டாலும், நித்தியத்தில் நாம் சந்தோஷமாயிருப்போம் என்று கூறினார். 5 வருடங்கள் மிஷனெரிப்பணி செய்து 19 வாரங்கள் படுக்கையிலிருந்த அவர் 1749-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி காலை ஆறு மணியளவில் தேவனுடைய ராஜ்யம் சேர்ந்தார். 29 வயதிலேயே மரணத்தை தழுவிய டேவிட் பிரெய்னார்ட்டின் ஊழியத்தை ஆய்வு செய்த ஒருவர் இப்படியாக கூறுகிறார். 70 ஆண்டுகள் ஜீவித்த மனிதர்கள் சாதித்ததைக் காட்டிலும் அவர் அதிகமாகவே சாதித்திருக்கிறார்.

No comments:

Post a Comment