Friday, 30 September 2011

யெகோவா சாட்சிகள்?

யார் இந்த யெகோவா சாட்சிகள்?

இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல


என்னுடைய கருத்து முடிவானதல்ல. வேதமே முடிவானது. முழுமையானது. வசனத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். எளிதில் தவறிப் போகமாட்டீர்கள்
நவீன காலத்தல் உருவான, உருவாகி வருகின்ற சில கொள்கைகளைப் பற்றியும் கற்றுக்கொள்வோம்.

யெகோவா சாட்சி:
உலகமெங்கும் பரவிவரும் இந்தக் கொள்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது. இந்த இயக்கத்தின் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மூவர்

1).   சார்லஸ் டாஸ் ரசல்    (Charles Taze Russell 1852-1916)   இவர் 1852 பிப்ரவரி 16ல் அமெரிக்காவில் பிறந்தார். இவருடைய தகப்பன் துணிக்கடை நடத்தி வந்தார். இவர் ஈடிகாங்ரிகேஷனல் சபையைச் சேர்ந்தவர். சபையில் பின்பற்றப்பட்ட விசுவாசப் பிரமாணங்கள் சிலவற்றைக் குறித்து ரசலுக்கு சந்தேகங்கள் வந்தது. குறிப்பாக நித்திய நரகம் போன்ற உபதேசங்கள் இதனால் மற்ற மார்க்க கொள்கைகளை கற்க ஆரம்பித்தார். பின்பு வேதத்தைக் கற்க ஆரம்பித்தார். குறிப்பாக தானியேல் வெளிப்படுத்தல் புத்தகங்களை ஆராய்ச்சி செய்தார். வில்லியம் மில்லர் என்பவரின் எழுத்துக்களால் கவரப்பட்டார். தனது 18ம் வயதில் பென்சில்வேனயா மாநிலத்திலுள்ள பிட்ஸ்பர்க் என்ற ஊரில் ஒரு வேதபாட வகுப்பை ஆரம்பித்தார். பின்பு அந்தக் குழுவுக்கு பேய்ப்பரானார்.
கி.பி 1879ல் வாச்டவர் பைபிள் அணுட் ட்ராக்ட் சொசைட்டி என்ற நிறுவனம் ஆரம்பமானது. ரசல் பல இடங்களுக்கும் பிரயாணம் செய்து தன் கொள்கைகளைப் பரப்பினார். அனேக புத்தகங்களை எழுதினார். 60 ஆண்டுகளில் சுமார் 2 கோடி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. இவர் சபையிலுள் பெண்களுடன் தவறான உறவு கொண்டிருக்கிறார் என்று இவரது மனைவி 1909ல் நீதிமன்றத்தில் 5 முறை வழக்கு தொடர்ந்தார் கடைசியில் விவாகரத்துப் பெற்றார். 1916ல் ரசல் மரித்தார்.

2).   ஜோசப் பிராங்ளின் ரத்தப்போர்ட்    (Joseph Franklin Rutherford 1869 1942) ரசலுக்குப் பின் 1917ல் இவர் இந்த இயக்கத்தின் தலைவரானார். இவர் ஒரு வழக்கறிஞர். பின் நீதிபதியானார். 1906ல் இவர் இந்த இயக்கத்தில் சேர்ந்தார். 1931ல் இந்த இயக்கத்தின் பெயர் யெகோவா சாட்சிகள் என்று மாற்றப்பட்டது. இவர்களுடைய தலைமை ஸ்தாபனம் நியூயோர்க்கில் இருக்கிறது.
இந்த இயக்கத்தின் புத்தகங்கள் கோடிக்கணக்கில் வெளியிடப்படுகின்றன. ருத்தர்போர்ட்டின் புத்தகங்கள் சுமார் 80 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சுமார் 8000 மிஷினரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்கள் என்பது பழைய கணக்கு. 1942ல் ருத்தர்போர்ட்டு கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சாண்டுயாக்கோ பட்டணத்தில் மரித்தார்.

3).    நேர்த்தன் நோர்    (Nathan Knorr) 1905ல் பிறந்தார். ருத்தர்போர்டுக்குப் பின் இதன் தலைவரானார். வீடு வீடாக சென்று சாட்சி பகர வேண்டுமென்பதை வலியுறுத்தியவர் இவர்தான். இவருடைய நாட்களில் தான் இந்த இயக்கம் அதிவேகமாக வளர்ந்துள்ளது.

யார் இந்த யெகோவா சாட்சிகள்?
இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை முதலாவது விளங்கிக் கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை நம்புகிறவர்களே கிறிஸ்தவர்கள். இவர்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களுடைய உபதேசங்களை சுருக்கமாகப் பார்ப்போம். யெகோவா சாட்சிகளின் முக்கிய கொள்கைகள். யெகோவாவே தேவன். இயேசு கிறிஸ்து யெகோவாவால் சிருஷ்டிக்கப்பட்டவர். இப்படிச் செய்வதன் மூலம் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிக்கிறார்கள். இவர்கள் தவறாகப் பயன்படுத்தும் வேதாகம வசனங்கள் ஆறு.

1).யோவான் 14:28 என் பிதா எங்கிருந்தாலும் பெரியவராயிருக்கிறார்.
2).லூக்கா 18:18,19 நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவர் ஒருவனும் இல்லையே.
3).1கொரி 11:3 கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார்.
4).1கொரி 15:18 குமாரன் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருப்பார்.
5).வெளி 3:14 தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியானவர் இயேசு.
6).கொலோ 1:15 சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர் இயேசு.

இந்த வசனங்களின் படி இயேசு கிறிஸ்து தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர். தேவனுக்குக் கீழானவர் என்று நம்புகிறார். இது தவறான போதனை என்பது நம் கொள்கை.
இதற்கு நாம் பதிலளிப்போம் இயேசு கிறிஸ்துவைப் பற்றி வேதம் கூறுவதென்ன?

1).ஏசாயா 7:14 கன்னிகையின் மைந்தன் இம்மானுவேல் என்றழைக்கப்படுவார்.
ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். அவர் நாம் வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா. சமாதான பிரபு.
2).மத்தேயு 1:23 இம்மானுவேல் என்றால் தேவன் நம்முடனிருக்கிறார்.
3).யோவான் 1:1,2,14 அந்த வார்த்தை தேவனாயிருக்கிறது. அந்த வார்த்தை மாம்சமாகி. நமக்குள்ளே வாசம் பண்ணினார்.
4).யோவான் 5:17,18 இயேசு தன்னை தேவனுக்கு சமமாக்கினார் என்று மக்கள் கூறினர்.
5).யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.
6).யோவான் 10:33 உன்னை தேவன் என்று சொல்லுகிறாயே என்று மக்கள் கூறினர்.
7).யோவான் 14:9,11 ஒன்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.
8).யோவான் 20:28 தோமா இயேசுவை நோக்கி."என் ஆண்டவரே,என் தேவனே" என்றான்.
9).கொலோ 1:15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்.
10).கொலோ 2:9 தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
11).1 தீமோ 3:16 தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்.
12).எபி 1:8 குமாரனை நோக்கி "தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கு முள்ளது"
13).1 யோவான் 5:20 இயேசு கிறிஸ்து மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்.
புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து கர்த்தர் என்று 663 இடங்களில் வருகிறது. கர்த்தர் என்பதற்கு கிரேக்க மொழியில் குரியோஸ் (Kurios)

என்று வருகிறது. புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் எழுதப்பட்டது. எபிரேய மொழியில் வரும் யெகோவா என்பதும் கிரேக்க மெழியில் வரும் குரியோஸ் என்பதும் ஒரே கருத்தில் தான் கர்த்தர் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை விளக்கும் சில வசனங்கள்.

யோவான் 5:26 பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவர். குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவர். அதாவது இயேசுவை யாரும் சிருஷ்டிக்கவில்லை என்பது தான் பொருள்.


யோவான் 14:6 நானே ஜீவன்.
யோவான் 1:4 அவருக்குள் ஜீவன் இருந்தது அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
யோவான் 10:18 என் ஜீவனைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.

தேவன் சர்வ வல்லவர், சகலத்தையும் அறிந்தவர், எங்கும் எப்போதும் இருக்கக்கூடியவர், மாறாதவர், பாவத்தை மன்னிக்கிறவர்,
சிருஷ்டிக்கிறவர், இத்தனை தெய்வீக தன்மைகளையும் இயேசு கிறிஸ்துவிடம் காண்கிறோம்.

இயேசு கிறிஸ்து சர்வ வல்லவர்.
மத் 28:18 வானத்திலும் பூமியிலும் சர்வ அதிகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வெளி 1:18 இயேசு கிறிஸ்துவே சர்வ வல்லமையுள்ள தேவன்.

இயேசு கிறிஸ்து சகலத்தையும் அறிந்தவர்.
யோவா 1:48 நாத்தான்வேலைப் பார்த்து நீ அத்திமரத்தின் கீழிறங்கும் போது என்னைக் கண்டேன் என்றார்.
யோவா 2:25 மனுஷருடைய எண்ணங்களையெல்லாம் அவர் அறிந்திருக்கிறார்.

இயேசு கிறிஸ்து எங்கும், எப்போதும் இருக்கக்கூடியவர்.
மத் 18:20 இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.
மத் 28:20 இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.

இயேசு கிறிஸ்து மாறாதவர்.
எபி 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்.

இயேசு கிறிஸ்து பாவத்தை மன்னிக்கிறார்.
மாற்கு 2:5-12 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது.

இயேசு கிறிஸ்து சிருஷ்டி கர்த்தர்.
யோவா 1:3,10 சகலமும் அவர்(இயேசு கிறிஸ்து)மூலமாய் உண்டாயிற்று.
கொலோ 1:16 அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது.சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
(எபே 3:9. எபி 1:2,10)

இயேசு கிறிஸ்துவை தொழுது கொண்டனர்.
மத் 8:2 குஷ்டரோகி இயேசுவை பணிந்து கொண்டான்.
மத் 9:18 தலைவன் இயேசுவை பணிந்து கொண்டான்.
மத் 14:33 படகிலிருந்தவர்கள் அவரைப் பணிந்து கொண்டார்கள்.
மத் 15:25 ஒரு பெண் இயேசுவை பணிந்து கொண்டாள்.
மத் 20:20 செபதேயுவின் குமாரனுடைய தாய் அவரை பணிந்து அகாண்டாள்.
மத் 28:9,17 சீஷர்கள் அவர் பாதங்களைத் தழுவி அவரை பணிந்து கொண்டார்கள்.

நமது ஊரில் கல்லையும், மண்ணையும், மனிதர்களையும் தொழுது கொள்கிறவர்களுக்கு இது புதிதாகத் தெரியாது. யூதர்கள் உயிரை விடுவார்களேயல்லாமல் தேவனைத்தவிர வேறு எதையும் பணிந்து கொள்ளவோ, வணங்கவோ மாட்டார்கள் என்பதை நாம் அறிய வேண்டும்.

மேற்கூறிய வசனங்களின் ஆதாரத்துடன் இயேசு கிறிஸ்துவே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.

No comments:

Post a Comment