"வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்."
Thursday, 22 December 2011
Tuesday, 20 December 2011
Sunday, 4 December 2011
புதிய உடன்படிக்கையின் மேன்மை!
புதிய உடன்படிக்கை என்றால்என்ன? அது பழைய உடன் படிக்கையில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? புதிய ஏற்பாடுகால விசுவாசத்தின் மேன்மை என்ன அதை எவ்வாறு நிறைவேற்றுவது? புதிய உடன்படிக்கை என்பது எதன் அடிப்படையில் செயல்படுகிறது? எதன் அடிப்படையில் ஒருவர் தேவனின் பழையஏற்பாட்டு கட்டளையை மீறி செயல்பட அதிகாரம் பெறுகிறார்? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு சரியான பதிலை அறியாமலேயே பலர் பலவித வைராக்கியத்தில் இருப்பதை பார்ப்பதில் எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது! புதிய உடன்படிக்கை என்றால் என்னவென்று அறியாதவர்கள் எப்படி புதிய உடன்படிக்கையை நிறைவேற்றபோகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. தேவாதி தேவனின் வார்த்தைகள் என்பது விளையாட்டு அல்ல "நேற்று எழுதி கொடுத்தேன் இன்று மாற்றினேன், நாளை நீ உன் இஸ்டத்துக்கு செயல்படு" என்று சொல்வதற்கு! அது வானத்தையும் பூமியையும் ஆளும் வார்த்தை. வானம் பூமியும் ஒழிந்துபோனாலும் ஒளிந்துபோகாத வார்த்தை. அதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு வெண்கலப்பலகையில் எழுதப்பட்ட எழுத்துகளை எப்படி மாற்றுவது சுலபம அல்லவோ அதுபோலவே தேவனின் வார்த்தைகளும். உலகில் உள்ள எல்லாம் அழிந்துபோகும் ஆனால் தேவனின் வார்த்தைமட்டும் என்றும் நிற்கும். ஏசாயா 40:8 புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது. ஆண்டவராகிய இயேசு நியாயபிரமாண புத்தகத்தில் தன்னை புதிய உடன்படிக்கையின் நிறைவேறுதல் என்பது பரிசுத்த ஆவியானவர் பூமிக்கு வந்தபிறகே ஆரம்பமானது. புதிய உடன்படிக்கை அடிப்படையில் அனைத்து செயல்பாடுகளையும் அருமையாக நிறைவேற்றிய ஒரு உன்னதமான மனிதன் யாரென்றால் அவர் பவுல் அப்போஸ்தலரே. அவர் புதிய உடன்படிக்கையின் வழியில் சரியாக நடந்ததோடு நான் கிறிஸ்த்துவை பின்பற்றுவதுபோல என்னை பின்பற்றுங்கள் என்று தயக்கமின்றி சொல்கிறார் I கொரிந்தியர் 4:16 ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். I கொரிந்தியர் 11:1 நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். மேலும் பல அப்போஸ்தலர்களுடைய நடபடிகள் |
பழைய உடன்படிக்கை Vs புதிய உடன்படிக்கை பழைய உடன்படிக்கை என்பது மத்தியஸ்தர்கள் மூலம் தேவனால் எழுதி கொடுக்கப்பட்ட வார்த்தைகளை (கட்டளைகளை நியாயங்களை) நம்முடைய மனித அறிவால் அமர்ந்து ஆராய்ந்து அதன்படி நம்மை நாமே நடத்துவது அல்லது அதன்படி நடக்க நாம் பிரயாசம் எடுப்பது ஆகும். ஆனால் புதியஉடன்படிக்கை என்றால் முற்றிலும் தேவனால் நடத்தப்படும் ஒரு நிலை. இங்கு மனித முயற்ச்சிக்கு இடமே இல்லை. நம்முள் இருக்கும் ஆவியானவர் நம்மை நடத்துவார். அவ்வாறு நடத்தபடுபவர்களுக்குதான் ஆக்கி ரோமர் 8:1ஆனபடியால், கிறிஸ்துஇயேசுவுக்குட்பட்டவர் இவ்வாறு தேவஆவியில் நடத்தபடுபவர்களுக்கு நியாயபிரமாணத்தின நீதி தானாக நிறைவேறும். ஏனெனில் இங்கு நடத்திசெல்பவர் நியாய பிரமாணத்தை கொடுத்த தேவனே! ரோமர் 8:4 மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். புதிய ஏற்பாட்டு காலத்தில் ஆவியானவர் பல பரிசுத்தவாங்களுடன் பேசி கரம்பிடித்து வழி நடத்தினார் என்பதை அனேக வசனங்கள் மூலம் உறுதிபடுத்த முடியும். அப்போஸ்தலர் 13:2 பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார். அப்போஸ்தலர் 20:23 பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன் அப்போஸ்தலர் 21:11 பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் . ரோமர் 8:16 ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். அப்போஸ்தலர் 8:29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்; இவ்வாறு தேவனின் ஆவியானவரால் போதித்து/ கண்டித்து/ பேசி/ தடுத்து வழி நடத்துதலே ஆவியால் நடத்தபபடுதல் ஆகும். இவ்வாறு ஆவியை பெற்று நடக்காதவர்கள் ஆவியில் நடத்தப்படவில்லை என்பதை அறிய வேண்டும். இப்பொழுது பழைய புதிய உடன்படிக்கைக்கு இடையே உள்ள வேறுபாட்டை ஒரு சிறு உதாரணம் மூலம் பார்க் நான் என் மகனிடம் சென்னை எழும்பூருக்கு எவ்வாறு போகவேண்டும் என்று ஒரு காகிதத்தில் எழுதிகொடுத்து "எழு ஆனால் புதிய ஏற்ப்பாடு என்பது "நானே என் மகனை கரம்பிடித்து போதித்து என்னுடனே அழைத்து சென்று எழும்பூரில் கொண்டுபோய் விடுவது." இந்நிலையில் நான் முன்பு எழுதிகொடுத்த வழி முறைகள் அவனுக்கு நிச்சயம் தேவையில்லைதான். அவனும் நான் எழுதிகொடுத்த பழைய வழிகளை கையில் வைத்துகொண்டு, அப்பா அங்கு போககூடாது, இங்கு போககூடாது என்று என்னிடம்\ சொல்லமுடியாது. நான் அவசரத்தினிமித்தம் வேறுவழியாக கூட அவனை அழைத்து செல்லலாம் ஆனால் நிச்சயம் அவனை எழும்பூர் கொண்டு சேர்த்து விடுவேன். எனவே நான் அவனை அழைத்துசொல்லும் அந்நேரத்தின் நான் என்ன சொல்கிறேன் என்று கேட்டு நடந்தால் மட்டும் போதுமானது அதேபோல் அனைத்தும் அறிந்த நம் தேவன், ஆவியாய் நம்முள் வந்துதங்கி, நமக்கு போதித்து நம்மை கரம்பிடித்து அழைத்து செல்லும் நிலைதான் புதிய ஏற்பாட்டு நிலை. அவ்வாறு அவர் ஆவியில் நம்மை வழிநடத்தி செல்லும்போது நாம் எதற்கும் பயப்படாமல், ஒரு சில பாரம்பரிய கட்டளைகளை மீறினாலும் அவர் இழுத்து செல்லும் வழியில் அவருக்கு கீழ்படிந்து சென்றால் மட்டுமே போதுமானது. வசனப்படி கீழ்கண்ட விளக்கத்தை தரமுடியும்: : எரேமியா 7:23 நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள் நீங்கள் நடவுங்கள் என்று நமக்கு கட்டளையிடுவது பழைய ஏற்பாட்டு பிரமாணம். யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் உங்களை நடத்துவார் என்று நமக்கு வாக்குகொடுப்பது புதியஏற்ப்பாடு பிரமாணம் எனவே நாம் இந்த புதியஏற்பாட்டு காலத்தில் முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது நம்முள் சத்திய ஆவியானவர் தங்கி இருக்கிறாரா? என்பதைத்தான். அதை எவ்வாறு அறிந்துகொள்வது? ஆதி அப்போஸ் த்தலர்களை வழி நடத்தியது போல் அனுதினம் நமக்கு போதித்து/ கடிந்துகொண்டு/ தடுத்து/ ஆட்கொண்டு வழி நடத்துகிறாரா என்பதான் அடிப்படையிலேயே! "அப்பாவின் வார்த்தைக்கும்" "அடுத்த வீட்டுகாரனின் வார்த்தைக்கும்" உள்ள வேறுபாடு எப்படி நமக்கு நன்றாக தெரியுமோ, அதுபோல் ஆவியானவரின் குரலை அடிக்கடி கேட்டு பழகபழக ஆண்டவரின் வார்த்தையை நாம்மால் சுலபமாக அறிய முடியும். இவ்வாறு நடத்தப்படும் நிலையில் நாம் தேவனின் எந்த வார்த்தையையும் கைக் கொண்டு நடக்க தேவையில்லையா? என்ற கேள்வி எழலாம். அதற்க்கு 'நாம் ஆவியானவரால் எவ்விதத்தில் நடத்தப்படுகிறோம்' என்பதன் அடிப்படையிலேயே பதில் தரமுடியும். அதைப்பற்றி பார்க்கலாம். . ஆவியில் நடத்தப்படுதலின் மூன்று நிலைகள்! |
ஆவியில் நடத்தப்படுதலின் மூன்று நிலைகள்! | ||||||||
புதிய ஏற்பாட்டு காலத்தை பொறுத்தவரை "ஆவியில் நடத்தப்படுதல்" என்பது மிகவும் அவசியமான ஓன்று. ஏனெனில் புதியஉடன்படிக்கை கீழி கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. எனவே ஆவியில் நடத்தபடாத எவரும் நியாயபிரமாணத்துக்கு கீழ்பட்டவவரே! மேலும் ரோமர் 8:1 கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந் ஆவியில் நடப்பவர்களுக்குதான் முதலில் நாம் பரிசுத்தத் ஆவியின் வரத்தை பெற்றிருக்கிறோமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்க்கான வழிமுறைகளை கீழ்க்கண்ட தொடுப்புகளில் தெரிவித்துள்ளேன். வெறும் அந்நியபாஷை பேசுவதை வைத்தோ, அல்லது ஆராதனை நேரத்தில் ஆடுவதை வைத்தோ ஆவியானவர் வந்திருக்கிறார் என்று உறுதிபடுத்த முடியாது. இதுபோன்ற காரியங்களை பிசாசும் சாதாரணமாக செய்துவிட முடியும். ஆவியின் கனிகளை வெளிப்படுத்தாத ஆவியா மேலும் அவர் நடத்துதலை அறிய கீழ்கண்ட தொடுப்ப்பை சொடுக்கவும். "ஆவியில் நடத்தப்படுதல்" என்பதை நான் அறிந்தவரையில் மூன்று வகையாக பிரிக்கலாம். 1. முழுவதும் தேவ ஆவியால் ஆட்கொண்டு நடத்தபடுதல் 2. ஆவியானவரின் கட்டளைபெற்று அதன்படி நாம் நடத்தல் 3. ஆவியானவரின் நடத்துதல் மற்றும் சுயமாக நடத்தல் இரண்டும் கலந்த நிலை. 1. முழுவதும் ஆவியானவரால் ஆட்கொண்டு நடத்தப்படுதல். நமது அறிவு, ஆற்றல், விருப்பம், வெறுப்பு எல்லாவற்றையும் ஒரு ஓரத்தில் விட்டு விட்டு ஆண்டவரின் கரத்தில் நம்மை முழுவதுமாக ஒப்புகொடுத்து அவர் என்ன சொன்னாலும் கேட்டு, ஏன்? என்று கேள்வி கேட்காமல் எதையும் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே இந்நிலை நமக்கு கிடைக்கும். இந்த நிலையை தருவது முழுக்க முழுக்க தேவனின் கரத்தில் இருக்கிறது நாமாக என்ன முயன்றாலும் பெறமுடியாது. தகுதி வாய்ந்தவருக்கு தேவன் கொடுக்கும் ஈவுதான் இந்நிலை. அதாவது நமது அறிவுசார்ந்த நிலையை தள்ளி ஆண்டவரின் கரத்தில் நம்மை முழுவதும் விட்டுவிடுவது. இந்நிலையில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆண்டவரே நம்மேல் வந்து தங்கி நம்மை ஆட்கொண்டு நடத்துவார். அவர் நடத்துதலை மீறி நம்மால் ஓன்று செய்ய முடியாது. நாம் கஷ்டப்பட்டாலும் நஷ்டப்பட்டாலும் அவர் சொல்வதை செய்தே ஆகவேண்டிய ஒரு நிலையில் ஆண்டவரின் கரம் நம்மேல் பலமாக இருக்கும். எசேக்கியேல் 3:14 நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது. நாம் நினைத்ததை செய்யமுடியாது அவர் நினைத்ததே நிறைவேறும். அப்போஸ்தலர் 16:7 மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார். இந்நிலையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தேவனே பொறுப்பு. இந்நிலை பொதுவாக பழையஏற்பாட்டு தீர்க்கத்ரிசிகளாகிய எரேமியா, எசேக்கியேல், ஏசாயா போன்றவர்களின் நிலைக்கு ஒத்தது. புதியஏற்பாட்டுக் காலத்தில் பவுல் மற்றும் பிலிப்பு ஸ்தேவான் போன்றவர்களையும் இதற்க்கு ஒப்பிடலாம். ஏசாயாவுக்கு வஸ்த்திரம் இல்லாமல் நடக்க சொன்னதுபோல் சி இங்கு ஆண்டவர் அவரது திட்டத்தை நிறைவேற்ற நம்மை எங்கு கொண்டு செல்ல வேண்டுமோ அங்கு அவரே கொண்டுசெல்லுவார். அவரது என்ன திட்டம் நிறைவேறியது என்பதுகூட நமக்கு சரியாக தெரியாது. சில நேரங்களில் அது நமக்கு சொல்லப்படும் சில நேரங்களில் ஒன்றும் சொல்லப்படமாட்டாது. நமது கீழ்படிதல் மூலம் தேவனின் ஏதோ ஒரு ஆவிக்குரிய திட்டம் அங்கு நிறைவேறும் அவ்வளவுதான். இதுவே முழுவதும் ஆவியில் ஆட்கொண்டு நடத்தப்படுதல். இந்நிலையில் நாம் தேவனின் கட்டளையை கைகொண்டு சங்கீதம் 73:24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
|
தானியேல்
எழுதப்பட்ட காலம் : கி.மு.535-530
கருப்பொருள் : உலக இராஜ்ஜியங்களின் மேல்
தேவனின் அதிகாரம்
எழுதியவர் : தானியேல்
ஆசிரியர் பற்றி :
தானியேல் என்ற பெயருக்கு "தேவன் என் நியாயாதிபதி" என்று பொருள். இவனே புத்தகத்தை எழுதியவனாகவும் இருக்கிறான். யூதா இராஜாவாகிய யோக்கீமின் மூன்றாவது ஆண்டில் நடந்த முதல் சிறையிருப்பில் பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டான். அப்பொழுது அவன் 17 வயதுடையவனாக இருந்திருக்கலாம். சிறையிருப்பின் முதல் வருடத்தில் இவனுடைய ஊழியம் ஆரம்பமாயிற்று. இவனது பரிசுத்த வாழ்க்கை, ஜெபம், ஞானம் இவனை பாபிலோனின் மேன்மையான இடத்திற்கு கொண்டு சென்றது. இவன் 7 இராஜாக்களின் காலத்தில் தன் ஊழியத்தை செய்தான். அன்றைய சாம்ராஜ்ஜியங்களில் உயர் பதவிக்கு வரும் நபர்கள் வெளியாட்களாக இருக்கும் பட்சத்தில் (அதாவது இராஜவம்சத்தை சாராதவனாகயிருக்கும் போது) அன்னகனாக மாற்றும் வழக்கம் இருந்தது.
தானியேலும் அப்படி மாற்றப்பட்டிருக்க வேண்டும் (தானி 1:3, II இராஜா 20:18, மத் 19:12). தன் மேன்மையின் மத்தியிலும், பாடுகளிலும் தேவனை இடைவிடாது ஆராதித்து வெற்றி பெற்றவன். இவன் பெற்ற வெளிப்பாடுகளின் சிறு பகுதி தன் காலத்தில் நிறைவேறுவதையும் கண்டவன். அதாவது பாபிலோனிய வீழ்ச்சி, மேதிய, பெர்சிய இராஜ்ஜியத்தின் தொடக்கம் போன்றவையாகும் (தானி 5 அதி). தன்னுடைய 80வது வயதில் மகிமையான வெளிப்பாடுகளை பெற்று அதை நமக்குக் கொடுக்கும்படியாக கர்த்தர் இவனை பயன்படுத்தினார். தன் வாழ்க்கையின் ஆரம்பமுதல் முடிவு வரை தேவனுக்கு உண்மையானவனாக, கர்த்தருக்குப் பயந்து காரியங்களை நடப்பித்த ஒரு சில தேவ மனிதர்களில் ஒருவனாக இடம் பிடித்தான். சமகால தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலினால் முன்னுதாரணமாகக் கூறப்பட்டவன் (எசே 14:14, 20 ; 28:3). இவனது மரணம் அநேகமாக இறுதி நாட்களை பாபிலோனிலேயே கழித்து இயற்கை மரணம் அடைந்திருக்க வேண்டும்.
தானியேல் புத்தகத்தின் நோக்கம் :
1. பாபிலோன் சிறையிருப்பில் கர்த்தருக்கு உண்மையிருந்த சில யூதர்களுடைய வரலாற்றை நமக்கு திருஷ்டந்தமாக வைக்கும்படியாக.
2. தேவன் இராஜ்ஜியங்களையும், தனிமனிதனையும் கவனித்து அவர்கள் செயல்களுக்கு தக்கதாக பதிலளிக்கிறார் என்பதை அறிந்திடவும்.
3. அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்யும்படியாகவும்
4. சிறையிருப்பு இஸ்ரவேல் மக்களுக்கு நிரந்தரமான நியாயத்தீர்ப்பு முடிவு அல்ல என்பதை உணர்த்தவும்.
5. உலக இராஜ்ஜியங்கள் இன்று ஆளுகை செய்து கொண்டிருந்தாலும், அவற்றிற்கு மேலாக தேவன் ஆளுகை செய்து தமக்கு சித்தமானவர்களுக்கு அதை கொடுக்கிறார் என்பதை நாம் உணர்ந்திட
6. நம்முடைய இரட்சகராகிய மேசியா சங்கரிக்கப்பட்டாலும். அவர் மீண்டும் தம்முடைய ஜனத்திற்காக இரண்டாம் முறை வருகிறார் என்பதைக் கூறவும்.
7. கடைசி நாட்களில் இஸ்ரவேலுக்கு நேரிடும் சில துன்பங்கள் முடிவில் சிலருக்கு நித்திய சந்தோஷத்திற்கும், சிலருக்கு நித்திய துன்பத்திற்கும் நடத்தும் என்பதை மக்கள் அறிந்து கொள்ளவும் எழுதப்பட்டிருக்கிறது.
பொருளடக்கம்:
1. சுய சரித்திரம் 1-6 அதி
அ. பாபிலோனுக்கு சிறையாக கொண்டுபோகப்படுதலும்; தானியேலின் தூய வாழ்க்கையின் ஆரம்பமும் 1 அதி
ஆ. சாம்ராஜ்ஜியங்களின் நிலையை குறித்த சொப்பனமும் அதன் விளக்கமும் 2 அதி
இ. நேபுகாத்நேச்சார் சிலை நிறுவப்படுதல் 3 அதி
ஈ. நேபுகாத்நேச்சாரின் பெருமையும், அவனுக்கு கிடைத்த தண்டனையும், மன்னிப்பும் 4 அதி
உ. பாபிலோனிய இராஜ்ஜியத்தின் கடைசி ராஜா பெல்ஷாத்சார் மேல் வந்த நியாயத் தீர்ப்பும் முடிவும் 5 அதி
ஊ. தானியேலின் பக்தி வைராக்கியத்திற்கு கிடைத்த வெற்றி 6 அதி
2. தானியேலுக்கு வெளிப்பட்ட முடிவின் தரிசனங்கள் 7-12 அதி
அ. இராஜ்ஜியங்களின் உண்மையான குணாதியத்தையும் நிலைமையையும் தானியேல் அறிந்து கொள்ளுதல் 7, 8 அதி
ஆ. தானியேலின் மன்றாட்டின் ஜெபமும், 70வது வாரத்தை குறித்த தரிசனங்கள் 9 அதி
இ. தானியேலுக்கு மகிமை நிறைந்த தேவ தரிசனம் 10 அதி
ஈ. தென், வட தேசத்து அதிபர்களைக் குறித்தும் எகிப்து, சிரியா இராஜ்ஜியங்களைப் பற்றின தரிசனங்கள் 11 அதி
உ. தன்னுடைய ஜனத்தையும், தன்னையும் பற்றின முடிவு நாள் குறித்து தரிசனங்கள் 12 அதி
தானியேல் புத்தகத்தின் உட்பார்வை :
1. தானியேலின் தூய்மையான இளமை வாழ்க்கையும், அதன் விளைவாக மற்றவர்களைவிட 10 மடங்கு அதிகம் ஞானம் உள்ளவனாகக் காணப்படுதல் முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
2. உலக சாம்ராஜ்ஜியங்களைக் குறித்து கூறப்பட்டுள்ளது போல அவ்வளவு தெளிவாக இராஜாக்களின் சரித்திர ஏடுகள் பதிவு செய்யப்படவில்லை. தானியேலின் காலத்தில் ஆண்ட இராஜாக்களின் பெயர்களைக் காண்போம்.
அ. நேபுகாத்நேச்சார் Nebuchadnezzar கி.மு.606-562
ஆ. மெரோடாக் Merodach கி.மு.562-560 இ. நெரிக்லிசார் Neriglissar கி.மு.560-556
ஈ. நெபோனிடஸ் Nebonidus கி.மு.556-539
உ. பெல்ஷாத்சார் Belshazzar கி.மு.550-539
ஊ. தரியு Darius (மேதியன்) கி.மு.539-525
ஐ. கோரேஸ் Cyrus கி.மு.539-530
3. உலக சாம்ராஜ்ஜியங்கள் குறித்த தரிசனங்கள் 2, 7, 8, 11 தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன் தோற்றமும், முடிவும் அதற்கு இராஜ்ஜியத்தின் நிலையைக் கூறப்பட்டுள்ளது.
பாபிலோன் கி.மு.626
மேதியபெர்சியா கி.மு.539
கிரேக்க கி.மு.330
ரோம் கி.மு.63
பத்து இராஜ்ஜியம்
தேவனுடைய ராஜ்ஜியம்
4. பத்து இராஜ்ஜியங்கள் அதாவது பத்து விரல்கள், பத்து கொம்புகள் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது. கி.பி.337 முதல் 364 வரை ரோமை ஆளுகை செய்த தியோடைசியஸ் என்ற ராஜா இவன் காலத்தில் ரோம் இரண்டாகப் பிரிந்தது. கி.பி.364 கிழக்கு ரோம், மேற்கு ரோம் என்று பிரிக்கப்பட்டு மேற்கு ரோம் கி.பி.476 வரையும், கிழக்கு ரோம் கி.பி.1453 வரை நீடித்தது. இதில் மேற்கு ரோமில் பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரியா போன்ற நாடுகளும், கிழக்கு ரோமில் கிரீஸ், எகிப்து, சிரியா, துருக்கி, பல்கேரியா ஆடுகளும் அடங்கும்.
5. அந்தி கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசன குறிப்புகள் உள்ளன. இதில் தானி 8:9ல் குறிப்பிடப்படுள்ள சின்ன கொம்பு சீரியா, மற்றும் பாலஸ்தீனாவை ஆண்ட அந்தியோக்கியா எப்பிப்பானேஸ் என்ற கிரேக்க தளபதியை குறிப்பதாகும். இவன் தேவாலயத்தில் பன்றியை பலியிட்டான். தன் சாயலாக ஒரு சிலையை செய்து அதை தேவாலயத்தில் வைத்தான். இஸ்ரவேல் ஜனங்களை கொடுமைப்படுத்தினான். எனவே, அந்தி கிறிஸ்துவிற்கு முன்னடையாளமாக சொல்லமாட்டான்.
ஆனால் தானி 7: 7,8ல் வரும் நபர் வரப்போகும் அந்தி கிறிஸ்துவை குறிக்கிறது. இவன் தேவனுடைய ஆலயத்தில் தேவனைப் போல உட்காருவான் (II தெச 2:4) இஸ்ரவேல் ஜனங்களையும் கொடுமைப்படுத்துவான். அவனே வரப்போகும் "சின்ன கொம்பு" என்று வர்ணிக்கப்பட்டவன்.
6. தானியேலின் 70 தீர்க்கதரிசன வாரங்கள்:
"வாரம்" என்ற வார்த்தை எபிரேய மொழியில் "SHABUA" என்றுள்ளது.
இதன் அர்த்தம் 7 நாட்கள் 7 மாதம் 7 வருடம் என்று பொருந்தக் கூடியதாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால் வாரம் என்பது எந்த சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமாகும். 22 23
ஆதலால் 70 வாரங்கள் என்பது :
1 வாரம் = 7 வருடம் 70 வாரங்கள் = 7 x 70 = 490 வருடங்கள் ஆகும்.
70 தீர்க்கதரிசன வாரங்களின் துவக்கம், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்பட்டதிலிருந்து (தானி 9:25) கி.மு.444ல் துவங்கி, அவற்றின் 69வது வாரம் கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட (தானி 9:26) கி.பி.33ல் நிறைவடைகிறது.
தீர்க்கதரிசன வருடத்தில் 360 நாட்கள் மட்டுமே எனவே இந்த கணக்குப்படி கி.மு.444 + கி.பி.33 = 483 வருடம் (நாட்கள் கணக்குப்படி)
மேசியா சங்கரிக்கப்பட்டதோடு இஸ்ரவேலின் தீர்க்கதரிசன கடிகாரம் நின்று போயிற்று. (இது சிலுவையில் அறையப்பட்டதையே குறிக்கிறது). மீண்டும் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையிலிருந்து இந்த கடிகாரம் மீண்டும் சுழ ஆரம்பித்து தனது கடைசி வார்த்தை அதாவது 7 வருடங்களை ஓடி முடிக்கும். இந்த ஏழு வருடங்கள் இயேசு கிறிஸ்துவின் இரகசிய பகிரங்க வருகைக்கு இடைப்பட்ட நாட்களாகும்.
தானியேல் புத்தகத்தின் சிறப்பம்சம்
1. பெரிய தீர்க்க தரிசனத்தின் புத்தகங்களில் சிறியதும் அதிகம் வாசிக்கப்பட்டு ஆராயப்படும் புத்தகமாக உள்ளது.
2. உலக பேரரசுகளின் சுருக்கமான வரலாறும் இறுதியில் நிறுவப்படும் கிறிஸ்துவின் ஆட்சியும் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
3. இந்த யுகத்தின் இறுதி முடிவைக் கூறும் சில பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் இதுவும் ஒன்று.
4. ஏனைய பழைய ஏற்பாட்டு புத்தகங்களைக் காட்டிலும் ஆசிரியரின் வாழ்க்கையை சிறப்பாக காட்டுகிறது.
5. புதிய ஏற்பாட்டின் வெளிப்படுத்தின விசேஷத்திற்கு இணையான பழைய ஏற்பாட்டின் வெளிப்பாட்டின் புத்தகமாக இது காட்சியளிக்கிறது. பாதி புத்தகம் சுய வரலாறாகவும் (1-6 அதி) மீதி தரிசனங்களாகவும் இப்புத்தகம் காணப்படுவது மிக சிறப்பு.
6. பழைய ஏற்பாட்டில் இயற்கைப்பாற்பட்டு தனது ஜனங்களை பாதுகாக்க தேவன் செய்யும் செயல்கள் பஞ்சாகமத்திற்கு இணையாக இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. (2-ம்) அக்கினிச்சூளை, சிங்ககெபி, இவை மாத்திரமல்ல தேவன் கொடுக்கும் நியாயத்தீர்ப்புகள் நேபுகாத்நேச்சார் மிருகத்தைப் போல மாறுவது, கையறுப்பு தோன்றி எழுதுவது போன்றவையாகும்.
7. தேவ மகிமையின் காட்சியை வெளிப்படுத்திக் காட்டும் நிலையில் சமகால எசேக்கியேலுக்கு சவால்விடும் புத்தகம். எனவே, இந்த காலத்தில் துன்பத்திற்கு மத்தியிலும் அதிகமான தேவ மகிமையை வெளிப்பட்டதை அறிந்து கொள்ள முடிகிறது.Friday, 2 December 2011
வேதாகம துணுக்கு 3
நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.
இஸ்ரவேலரின் முதல் மாதத்தின் பெயர் “ஆபிப்” (நிசான்). யாத் 12:12, 13:4, உபா 16:1, எஸ்தர் 3:7.
கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே சிலுவை மரணம் கொடுத்தனர் ரோமர் குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.
மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அற்றூலின் ஆசிரியரான மார்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.
சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.
எலியாவை தேவன் அக்கினி ரதமும், அக்கினி குதிரைகள் மூலமாய், சூழல்காற்றிலே உயிரோடு எடுத்து கொண்டார் 2 இரா 2:11.
ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்து கொண்டிருக்கையில் தேவனால் உயிரோடு எடுத்துகொள்ளப்பட்டான் ஆதி 5:24.
கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்து “அல்பா” கடைசி எழுத்து “ஒமேகா” ஆகும் (வெளி 1:8-ல் நம் தேவனின் நாமமு இதுவே).
பிதாவாகிய தேவனை “அப்பா” என்று வேதத்திலே மூன்று முறை குறிப்பிடஊஅட்டுள்ளது.(மாற் 14:36, ரோம 8:15, கலா 4:6).
வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாக் 2:23).
இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டுவந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள் :-
1) மெல்கொயர் – பரிசு பொன்.
2) காஸ்பர் – பரிசு வெள்ளை போளம்.
3) பால்தாஜர் – தூபவர்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்ரவேலரின் முதல் மாதத்தின் பெயர் “ஆபிப்” (நிசான்). யாத் 12:12, 13:4, உபா 16:1, எஸ்தர் 3:7.
கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே சிலுவை மரணம் கொடுத்தனர் ரோமர் குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.
மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அற்றூலின் ஆசிரியரான மார்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.
சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.
எலியாவை தேவன் அக்கினி ரதமும், அக்கினி குதிரைகள் மூலமாய், சூழல்காற்றிலே உயிரோடு எடுத்து கொண்டார் 2 இரா 2:11.
ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்து கொண்டிருக்கையில் தேவனால் உயிரோடு எடுத்துகொள்ளப்பட்டான் ஆதி 5:24.
கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்து “அல்பா” கடைசி எழுத்து “ஒமேகா” ஆகும் (வெளி 1:8-ல் நம் தேவனின் நாமமு இதுவே).
பிதாவாகிய தேவனை “அப்பா” என்று வேதத்திலே மூன்று முறை குறிப்பிடஊஅட்டுள்ளது.(மாற் 14:36, ரோம 8:15, கலா 4:6).
வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாக் 2:23).
இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டுவந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள் :-
1) மெல்கொயர் – பரிசு பொன்.
2) காஸ்பர் – பரிசு வெள்ளை போளம்.
3) பால்தாஜர் – தூபவர்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
வேதாகம துணுக்கு - 2
“ஜீவ விருட்சம்” என்ற வார்த்தை, வேதத்தில் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் 3 முறையும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் 3 முறையும் வருகிறது. ஆதி 2:9; 3:22,24. வெளி 2:7; 22:2, 14.
வேதாகமத்திலே 3 நபர்களுக்கு “இயேசு” என்னும் பெயர் இருக்கிறது.
1. நம்முடைய தேவன் இயேசு – மத் 1:21.
2. கள்ளத்தீர்க்கதரிசியான பர்யேசு – அப் 13:6.
3. யுஸ்து என்னப்பட்ட இயேசு – கொலோ 4:11.
“அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முரை வருகிறது – மாற் 14:36, ரோம 8:15; கலா 4:6.
லேவியராகமத்தில் “தேவனாகிய கர்த்தர்” என 21 தடவை வருகிறது – லேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.
யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3 குமாரத்திகளும் பிறந்தார்கள் – யோபு 1:2, 42:13.
தேவன் சமுத்திரத்துக்கு எல்லையைக் குறித்து வைத்திருக்கிறார் – யோபு 38:8-11.
கர்த்தருக்கு காணிக்கை செலுத்திய முதல் மனிதனும் காயீனே, முதல் கொலைகாரனும் காயீனே – ஆதி 4.
யோர்தான் நதி 3 முறை இரண்டாக பிரிந்தது
1. யோசு 4:7,19.
2. 2 இரா 2:8.
3. 2 இரா 2:13,14.
லேவியராகமத்தில் “கர்த்தர்” என்கிற வார்த்தை 21 தடவை வருகிறது. லேவி 11:45, 18:5,22; 19:12,16,18,28,89,32,37; 20:18; 21:12, 22:2,8,31,32,33; 26:2,45.
வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக் உயரமான மலை அரராத் மலை. இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.
ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (தற்போதைய பெயர் யூப்பிரடிஸ்) என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.
ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.
மோசே குழந்தையாக எஇடப்பட்ட நைல் நதியின் மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.
யோர்தான் நதியினுடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.
தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.
வேதாகமத்திலே 3 நபர்களுக்கு “இயேசு” என்னும் பெயர் இருக்கிறது.
1. நம்முடைய தேவன் இயேசு – மத் 1:21.
2. கள்ளத்தீர்க்கதரிசியான பர்யேசு – அப் 13:6.
3. யுஸ்து என்னப்பட்ட இயேசு – கொலோ 4:11.
“அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முரை வருகிறது – மாற் 14:36, ரோம 8:15; கலா 4:6.
லேவியராகமத்தில் “தேவனாகிய கர்த்தர்” என 21 தடவை வருகிறது – லேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.
யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3 குமாரத்திகளும் பிறந்தார்கள் – யோபு 1:2, 42:13.
தேவன் சமுத்திரத்துக்கு எல்லையைக் குறித்து வைத்திருக்கிறார் – யோபு 38:8-11.
கர்த்தருக்கு காணிக்கை செலுத்திய முதல் மனிதனும் காயீனே, முதல் கொலைகாரனும் காயீனே – ஆதி 4.
யோர்தான் நதி 3 முறை இரண்டாக பிரிந்தது
1. யோசு 4:7,19.
2. 2 இரா 2:8.
3. 2 இரா 2:13,14.
லேவியராகமத்தில் “கர்த்தர்” என்கிற வார்த்தை 21 தடவை வருகிறது. லேவி 11:45, 18:5,22; 19:12,16,18,28,89,32,37; 20:18; 21:12, 22:2,8,31,32,33; 26:2,45.
வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக் உயரமான மலை அரராத் மலை. இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.
ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (தற்போதைய பெயர் யூப்பிரடிஸ்) என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.
ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.
மோசே குழந்தையாக எஇடப்பட்ட நைல் நதியின் மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.
யோர்தான் நதியினுடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.
தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.
வேதாகம துணுக்கு - 1
தாவீது 3 முறை ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டார்
a. தன் வீட்டார் மத்தியில் 1 சாமு 16:12,13
b. தன் கோத்திரத்தார் (யூதா) மத்தியில் – 2 சாமு 2:4.
c. தன் தேசத்தாரின் மத்தியில் – 2 சாமு 5:3.
கிதியோன் மீதியானியரை ஜெபிக்க சதாரணமான பொருள்களை பயன்படுத்தினார் – நியா 7:16-22.
a. எக்காளம்
b. வெறும் பானை
c. தீவட்டி
3 விதமான கிறிஸ்துக்கள்
a. இயேசு கிறிஸ்துக்கள் – எபி 13:8
b. அநிதிக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.
பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறது –
லேவி 17:7;
உபா 32:17;
2 நாள 11:15.
தாவீதின் பராக்கிரமசாலியான “பெனாயா” என்பவர் 3 சிங்கங்களை கொன்றவன் – 2 சாமு 23:20,22
மனுஷனுக்குள் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற 3 தத்துவங்கள் அடங்கியிருக்கிறது – 1 தெச 5:23.
இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும் – நியா 4:4.
தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த Samuel.F.B Morse முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா?
What hath God wrought ? – Num 23:23.
தேவன் என்னென்ன செய்தார்? – எண் 23:23.
யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.
நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.
வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.
a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.
புதிய ஏற்பாட்டில் “அல்லேலூயா” என்ற வார்த்தை நான்கு முறை வருகிறது – வெளி 19:1,3,4,6.
‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது
1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.
2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.
3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.
4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.
ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்
1. எலியா – 1 இராஜ 18:37,38.
2. தாவீது – 1 நாளா 21:25,26.
3. சாலொமோன் – 2 நாளா 7:1.
a. தன் வீட்டார் மத்தியில் 1 சாமு 16:12,13
b. தன் கோத்திரத்தார் (யூதா) மத்தியில் – 2 சாமு 2:4.
c. தன் தேசத்தாரின் மத்தியில் – 2 சாமு 5:3.
கிதியோன் மீதியானியரை ஜெபிக்க சதாரணமான பொருள்களை பயன்படுத்தினார் – நியா 7:16-22.
a. எக்காளம்
b. வெறும் பானை
c. தீவட்டி
3 விதமான கிறிஸ்துக்கள்
a. இயேசு கிறிஸ்துக்கள் – எபி 13:8
b. அநிதிக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.
பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறது –
லேவி 17:7;
உபா 32:17;
2 நாள 11:15.
தாவீதின் பராக்கிரமசாலியான “பெனாயா” என்பவர் 3 சிங்கங்களை கொன்றவன் – 2 சாமு 23:20,22
மனுஷனுக்குள் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற 3 தத்துவங்கள் அடங்கியிருக்கிறது – 1 தெச 5:23.
இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும் – நியா 4:4.
தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த Samuel.F.B Morse முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா?
What hath God wrought ? – Num 23:23.
தேவன் என்னென்ன செய்தார்? – எண் 23:23.
யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.
நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.
வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.
a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.
புதிய ஏற்பாட்டில் “அல்லேலூயா” என்ற வார்த்தை நான்கு முறை வருகிறது – வெளி 19:1,3,4,6.
‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது
1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.
2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.
3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.
4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.
ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்
1. எலியா – 1 இராஜ 18:37,38.
2. தாவீது – 1 நாளா 21:25,26.
3. சாலொமோன் – 2 நாளா 7:1.
Thursday, 1 December 2011
Subscribe to:
Posts (Atom)