Monday 10 October 2011

மனிதன் மரித்தபின் ஒன்றும் அறியானா?



கீழ்க்கண்ட வசனங்களை சுட்டிகாட்டி சில சகோதரர்கள் பாதளம் என்று எதுவும் இல்லை மரித்தவார்கள் ஒன்றும் அறியமாட்டார்கள் என்று கருதுகின்றனர்.
பிரசங்கி 9:5,10 மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
இந்த  வசனத்தை கொஞ்சம் நன்றாக ஆராய்ந்து  பார்த்தால்  
1. மரித்தவன் ஒன்றும் அறியான்
2. இனி அவனுக்கு ஒரு பயனும் இல்லை
3. அவன் பெர்யர் மறைக்கப்பட்டிருக்கிறது
3. போகிற பாதாளத்தில் நடக்கும் செய்கையை அறியும் ஞானம் இல்லை.
இதில் முதல் வரியை  நமது தலைப்புக்கு  அடிப்படையாக எடுத்து கொண்டால் இரண்டாம் வரி பொய்யாகிவிடும். "மரித்தவனுக்கு இனி ஒரு பயனும் இல்லையா?" அவன் மீண்டும் எழுந்திருப்பான்  என்று தானியேல்  சொல்கிறார் / இயேசுவும்  சொல்கிறார் பலருக்கு  நித்திய ஜீவன் என்னும் பயன்  உண்டு என்றும் அவரே சொல்கிறார் அவ்வாறிருக்கும் போது இனி ஒரு பயனும் இல்லை என்று எவ்வாறு சொல்ல முடியும்?
உண்மையில் சாலமன் ஞானி  மரித்தவனைபற்றிய இந்த இவ்உலகநிலையே இவ்வசனத்தில் எடுத்து கூறியிருக்கிறார்.  அவ்வாறு பார்த்தால் இவ்வசனம் சரியாக பொருந்தும்.
ஒருவன் மரித்தபின் இவ்வுலகில் நடப்பதை ஒன்றும் அறியான். அவனுக்கு இவ்வுலகில் எந்த பயனும் இல்லை, அவன் பெயர் இவ்வுலகில் விரைவில் மறைக்கப்படுகிறது, அவன் மரித்தபின் போகும் பாதாளத்தில் என்ன நடக்கும் என்பதை அறியும் ஞானம் அவனுக்கு இல்லை   
இதுதான் இவ்வசனத்தின் சரியான பொருள்.
சங்கீதம் 6:5 மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?

மரித்தவர்கள் யாரும் தேவனை நினைவு கூறுவது இல்லை,
பாதாளத்தில் வேதனை 
 அனுபவிக்கும்  யாரும் தேவனை துதிக்க மாட்டார்கள்  அதையே இவ்வசனம் சொல்கிறது 

தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.


பூமியின்  தூளில் நித்திரை பண்ணும் அநேகரில் (இது மேல் பாதாளத்தில் இருக்கும் நித்திரை நிலையை குறிக்கும்) இதில் சிலர் நித்திய ஜீவனுக்கு சிலர் நித்திய நிந்தைக்கும் எழுவார்கள். மற்றவர்கள் இறுதி நியாயதீர்ப்பு வரை அங்கேயே இருப்பார்கள்.  


பிரசங்கியில் (9: 5-10௦) கருத்துக்களில் எல்லாமே ஒரு மரணவீட்டில் அமர்ந்துகொண்டு ஒரு தத்துவஞானி மரித்தவனின் உலக நிலை பற்றி பொதுவாக சொல்வது போல்வே அமைந்துள்ளன   
இங்கு முக்கிய வேறுபாடை தரும் வசனம்   
they have no further reward,
அவர்களுக்கு அடுத்து (மரணத்துக்கு பிறகு) எதுவும் வெகுமதி கிடையாது
மரித்தவனுக்கு அவன் செய்கையின் அடிப்படையில் மரணத்துக்கு பின் சிலருக்கு நித்திய  ஜீவன் சிலருக்கு நித்திய நிந்தை என்ற வெகுமதி மற்றும் தண்டனை உண்டு என்பதை தானியல்  வசனம் திட்டவட்டமாக சொல்கிறது.
இந்நிலையில் "மரித்தவனுக்கு  வெகுமதியே இல்லை"  என்று பிரசங்கி சொல்வதால் அவ்வசனம்  நிச்சயம் "மரணத்துக்கு பின் அவனுக்கு இந்த உலகில் எந்த வெகுமதியும் இல்லை" என்றே பொருள்கொள்ள முடியும். சிலருக்கு மரித்தபின் கூட இந்த உலகம் வெகுமதி கொடுத்தாலும் அதனால் மரித்தவனுக்கு எந்த பலனும் இல்லை. எனவே அவ்வாசனம் உலகத்தில் உள்ளவர்களுக்கு மரித்தவனின் உலகநிலை என்னவென்பதை குறிப்பிடவே சொல்லப்பட்டது. .   
  
மேலும்  மரித்தவர்கள்  சிலர் உணர்வுடன்  பாதாளத்தில் நிந்தையை சுமந்துகொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர்கள்  பாதாளத்தினுள் நடுவில் இருந்து பேசுவார்கள் என்றும் கீழ்க்கண்ட வசனம் சொல்லுகிறது.  
எசேக்கியேல் 32:21 பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும் அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் பட்டயத்தால் வெட்டுண்டு இறங்கி, அங்கே கிடக்கிறார்கள்.


எசேக்கியேல் 32:30
அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியரும் கிடக்கிறார்கள்; இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டு, வெட்டுண்டவர்களிடத்திலிறங்கி, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு இருக்கையில் மரித்தவர்கள் ஓன்று அறியாத நிலையில் மட்டுமே இருக்கிறார்கள் என்று பல சகோதரர்கள் சொல்லும்  கூற்றை ஏற்க்கமுடியவில்லை.. என்னை பொறுத்தவரை சிலர் ஒன்றுமறியா தூக்கநிலையிலும் சிலர் வேதனை அனுபவித்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்றே  கருதுகிறேன்    
காரணம்  "நரகம்" என்ற வார்த்தைக்கு  வேதனையுள்ள இடம் என்று பொருள் கொள்ளலாம் என்று கருதுகிறேன். ( Hell is a place of suffering and punishment)இங்கு நரக பாதாளத்தில் கிடக்கிறார்கள் என்று நிகழ காலத்தில் வேதம் குறிப்பிடும் இடம் எது ?   
நீதிமொழிகள் 9:18 ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்
நிச்சயமாக அது ஏதோ ஒரு வேதனையுள்ள இடமாகத்தான் இருக்க முடியும். இந்த இடத்தைதான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மரித்த ஐஸ்வர்யாவான் போனஇடம் என்று குறிப்பிடுகிறார்  
  
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்
இதற்க்கு தொடர்புடைய வசனங்கள் பழைய ஏற்பாட்டில் இருக்கும்போது, ஐஸ்வர்யாவான் லாசரு உவமையில் இயேசு இல்லாத ஒன்றை கற்பனைபண்ணி  சொல்லி பயம்காட்டினரா? 
இயேசுவின்  உவமைகளில்  எல்லாமே உலகஉண்மை  நிலைகளோடு ஒத்ததாகவும்
உலகில் நடக்கும் காரியங்களுமாகவே இருந்தது
அது போல்  லாசரு மரித்து ஆபிரகாம் மடிக்கும் ஐஸ்வர்யவன் மரித்து பாதாளத்தில் வேதனை அனுபவித்ததும் ஒரு உண்மை உவமையாகவே இருக்க முடியும் மாறாக  எந்த ஒரு அடிப்படையும் இல்லாத அர்த்தமற்ற உவமையை இயேசு சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.  எனவே மரித்தபின் மனிதர்கள்  ஒன்றுமில்லாமல் போவது இல்லை. அவர்கள் துன்பம் அனுபவிக்கும்  இடம்  மற்றும் தேற்றப்படும் இடம்  நிச்சயம் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். 

No comments:

Post a Comment