Friday, 2 December 2011

வேதாகம துணுக்கு 3

நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.


இஸ்ரவேலரின் முதல் மாதத்தின் பெயர் “ஆபிப்” (நிசான்). யாத் 12:12, 13:4, உபா 16:1, எஸ்தர் 3:7.


கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே சிலுவை மரணம் கொடுத்தனர் ரோமர் குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.


மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அற்றூலின் ஆசிரியரான மார்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.


சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.


எலியாவை தேவன் அக்கினி ரதமும், அக்கினி குதிரைகள் மூலமாய், சூழல்காற்றிலே உயிரோடு எடுத்து கொண்டார் 2 இரா 2:11.


ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்து கொண்டிருக்கையில் தேவனால் உயிரோடு எடுத்துகொள்ளப்பட்டான் ஆதி 5:24.


கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்து “அல்பா” கடைசி எழுத்து “ஒமேகா” ஆகும் (வெளி 1:8-ல் நம் தேவனின் நாமமு இதுவே).


பிதாவாகிய தேவனை “அப்பா” என்று வேதத்திலே மூன்று முறை குறிப்பிடஊஅட்டுள்ளது.(மாற் 14:36, ரோம 8:15, கலா 4:6).


வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாக் 2:23).



இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டுவந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள் :-
1) மெல்கொயர் – பரிசு பொன்.
2) காஸ்பர் – பரிசு வெள்ளை போளம்.
3) பால்தாஜர் – தூபவர்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment